தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு: 2ம் இடம் பிடித்தது சென்னை மண்டலம்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு: 2ம் இடம் பிடித்தது சென்னை மண்டலம்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு: 2ம் இடம் பிடித்தது சென்னை மண்டலம்


UPDATED : மே 14, 2026 09:02 PM

ADDED : மே 14, 2026 09:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2026 09:02 PM ADDED : மே 14, 2026 09:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், 93.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலம் இரண்டாமிடம் பிடித்து உள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. அதில், 85.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது, கடந்த ஆண்டை விட, 3.19 சதவீதம் குறைவு.

அதாவது, 18.57 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 17 லட்சத்து, 68,968 மாணவ, மாணவியர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

போட்டி

இந்தாண்டு, 'ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்' எனும் கணினி வழி மதிப்பீட்டு முறையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

மாணவர்களின் மன நலனை பாதுகாக்கும் வகையிலும், ஆரோக்கியமற்ற போட்டியை குறைக்கும் நோக்கிலும், கடந்த 2020 முதல் முதலிடம் பிடித்தவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை, சி.பி.எஸ்.இ., வெளியிடுவதில்லை.

இந்த தேர்வு முடிவிலும், அந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. இந்தாண்டு தேர்வு முடிவுகளின்படி, 94,028 மாணவர்கள், அதாவது 5.32 சதவீதம் பேர், 90 சதவீத மதிப்பெண்ணுக்கும் மேல் பெற்றுள்ளனர்.

அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற சதவீதத்தின் அடிப்படையில், திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம்; சென்னை மண்டலம் இரண்டாமிடம்; பெங்களூரு மண்டலம் மூன்றாமிடம் என, தென் மண்டலங்கள் முதல் மூன்று இடங்களை பெற்று சாதித்துள்ளன.

அதே போல், 72.43 சதவீதத்துடன் பிரயாக்ராஜ் கடைசி இடத்தையும், 74.45 சதவீதத்துடன் பாட்னா, 79.02 சதவீதத்துடன் நொய்டா ஆகிய மண்டலங்கள், அதற்கு அடுத்தடுத்த இடங்களையும் பிடித்து உள்ளன.

துணை தேர்வு

சென்னை மண்டலத்தைப் பொறுத்தவரை, 1 லட்சத்து, 2,284 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களில் 95,979 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல, மாணவர்களை விட மாணவியரே இந்தாண்டும் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 88.86 சதவீதமும், மாணவர்கள் 82.13 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர். அதே போல், திருநங்கையர் அனைவரும், இரண்டாவது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.

கடந்தாண்டு, 88.39 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், இந்தாண்டு 3.19 சதவீதம் சரிந்து, 85.20 சதவீதமாக பதிவாகி உள்ளது. தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்கள், வரும் 18ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

அதே போல், தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, ஜூலை 15ம் தேதி ஒரே கட்டமாக துணைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

சிறப்பாக செயல்பட்ட மண்டலங்களும் அவை பெற்ற மதிப்பெண் சதவீதமும்:

மண்டலம் / மதிப்பெண் சதவீதம்


1. திருவனந்தபுரம் - 95.62

2. சென்னை - 93.84

3. பெங்களூரு - 93.19

4. விஜயவாடா - 92.77

5. டில்லி மேற்கு - 92.34

6. டில்லி கிழக்கு - 91.73

7. ஆமதாபாத் - 90.60

8. குருகிராம் - 88.45

9. லுாதியானா - 87.92

10. புனே - 87.32


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us