தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமிர்தா பல்கலையில் 2கிளவுட் கம்ப்யூட்டிங்3 மாநாடு

அமிர்தா பல்கலையில் 2கிளவுட் கம்ப்யூட்டிங்3 மாநாடு

அமிர்தா பல்கலையில் 2கிளவுட் கம்ப்யூட்டிங்3 மாநாடு


UPDATED : டிச 23, 2009 12:00 AM

ADDED : டிச 23, 2009 03:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2009 12:00 AM ADDED : டிச 23, 2009 03:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகம் முழுவதும் உள்ள சிறந்த ஐ.டி., நிறுவனங்களான ஐ.பி.எம், மைக்ரோசாப்ட், ஹவ்லெட், கூகிள், அமேசான் போன்றவை தங்களுடைய சேவையை, கிளவுட் கம்யூட்டிங் மூலமாக செய்ய முன்வந்துள்ளன.
இது தொடர்பான மாநாடு அமிர்தா பல்கலையில் நடந்தது. பல்கலையின் ஐ.டி.துறைத் தலைவர் கங்காதரன் வரவேற்றார். அமெரிக்க பியூஜிட்ஸ் லேப்ஸ் ஸ்ரீராஜன், அமிர்தா ஐ.டி.துறை துணைத் தலைவர் பிரசாந்த் நாயர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.அமிர்தா பல்கலை துணைவேந்தர் வெங்கட்ரங்கன் தலைமை வகித்து பேசியதாவது:


இந்தியாவில் முதன்முறையாக இம்மாநாடு, அமிர்தா பல்கலையில் நடைபெறுகிறது. அதிகப்படியான வேலைப்பளு, நெட்ஒர்க்கிங்,ஸ்டோரேஜ் போன்றவற்றை எளிமையாக்க அதிக செயல்திறனுடன், குறைந்த செலவில் இந்த கிளவுட் சிஸ்டம் இயங்குகிறது. அமிர்தாவின் மருத்துவமனை, கல்விநிறுவனங்கள் அனைத்தும் இந்த கிளவுட் கம்யூட்டிங் முறையில் செயல்படுகின்றன.

நாட்டில் எங்கிருந்தும், இன்டர்நெட் துணையுடன் நம் கம்யூட்டர் புரோகிராமை இயக்கலாம். இதற்காக சாப்ட்வேர்களை தனித்தனியாக வாங்க வேண்டாம்; இன்ஸ்டால் செய்ய வேண்டாம்; குறைந்த செலவில் கிளவுட் கம்யூட்டிங் மூலம் ஒரே இணைப்பாக பயன்படுத்தலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
ஐ.பி.எம்., நிறுவனத்தை சேர்ந்த விஜய்சுதங்கர் கூறியதாவது:


கிளவுட் கம்யூட்டிங் முறையில், கம்யூட்டர் புரோகிராம்கள், டேட்டாக்கள் பாதுகாப்பாகவும், வைரஸ் தாக்காமலும் வைக்கப்படுவதால், வீட்டிலும் அனைத்து சாப்ட்வேர்களையும் மெயில்களையும் பயமின்றி உபயோகிக்கலாம்.கம்யூட்டர் ஹார்ட்வேர்களை குறைந்த செயல்திறனில் வாங்கினாலே போதும், இதனால், ஏ.சி., மின்சாரம் மிச்சமாவதுடன், ஹார்ட்வேர் செலவும் குறையும்; பசுமையான ஐ.டி.துறையை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
 
மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இந்த லாபகரமான, பாதுகாப்பு முறையை பயன்படுத்தலாம். அனைத்து பல்கலைகளும் இதன்மூலம் ஆன்லைனாக மாற்றப்பட்டால், எழுதும் பேப்பர் செலவு மிச்சமாவதால், மரங்கள் வெட்டப்படுவதைத் தவிர்க்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
 
இம்மாநாட்டில், ஐ.டி., துறைசார்ந்த நிறுவனர்கள், கல்வி நிறுவனங்கள், மாணவ, மாணவியர் உட்பட 500க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us