தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்டாக் கலந்தாய்வு 20ம் தேதி துவக்கம்

சென்டாக் கலந்தாய்வு 20ம் தேதி துவக்கம்

சென்டாக் கலந்தாய்வு 20ம் தேதி துவக்கம்


UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM

ADDED : ஜூன் 17, 2014 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM ADDED : ஜூன் 17, 2014 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தொழிற்கல்வி சேர்க்கைக்கான சென்டாக் கவுன்சிலிங் வரும் 20ம் தேதி துவங்குகிறது என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், "அரசு மருத்துவக் கல்லூரியில், பேராசிரியர்கள் குறைவாக உள்ளதாக மருத்துவக் கவுன்சில் சுட்டிக் காட்டியது. இதையடுத்து, பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பதவிகளுக்கான 33 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

டில்லி சென்றிருந்தபோது, சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலரையும், இணைச் செயலரையும் சந்தித்து, அரசு மருத்துவக் கல்லூரி தொடர்பாக பேசினேன். பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தரப்படும் என்றனர்.

தற்போது, பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட தகவலுடன், சுகாதாரத் துறை செயலர் ராகேஷ் சந்திரா 17ம் தேதியன்று (இன்று) டில்லிக்கு செல்கிறார். அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு கண்டிப்பாக அனுமதி கிடைக்கும். இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள, மேலும் பல பதவிகளை நிரப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பிம்ஸ் மருத்துவக் கல்லூரி, சிறுபான்மை அந்தஸ்துள்ள கல்லூரி என, கோர்ட்டுக்கு சென்றுள்ளது. கோர்ட்டுக்கு சென்றுள்ளதால் அதைப் பற்றி பேசக் கூடாது. அரசு ஒதுக்கீட்டுக்கு பெறப்பட்ட இடங்களை முழுமையாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us