UPDATED : அக் 16, 2015 12:00 AM
ADDED : அக் 16, 2015 11:03 AM
அ நிறம் | அளவு
சென்னை:
டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வு, வரும் 20ல்
நடக்கிறது.
அரசு நர்சிங் கல்லுாரி மற்றும் பள்ளிகளில், இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள் இருந்தன. இரண்டு கட்ட கலந்தாய்வுகளில், 1,929 இடங்கள் நிரம்பின; மீதம், 71 இடங்கள் உள்ளன. இதற்கான இறுதிகட்ட கலந்தாய்வு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவக் கல்வி இயக்ககத்தில், வரும் 20ல் நடக்கிறது.
மேலும் விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
