UPDATED : நவ 04, 2024 12:00 AM
ADDED : நவ 04, 2024 03:42 PM
சென்னை:
மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளை, வரும் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
தமிழக அரசு பள்ளி களில், பள்ளிகள் அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இடையிலான வட்டார போட்டிகள், தற்போது நடக்கின்றன. இதில், வெற்றி பெறும் மாணவர்களின் விபரங்களை, வரும் 8ம் தேதிக்குள், எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
வட்டார போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு, வரும் 11ம் தேதி முதல் 20ம் தேதிக்குள், மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும். அதில், வெற்றி பெறும் மாணவர்களை மாநில போட்டிகளுக்கு அனுமதிக்க வேண்டும். அதேபோல, அரசு உதவி பெறும் பள்ளிகளில், போட்டிகளை தனியாக நடத்த வேண்டும்.
வட்டார போட்டிக்கு 25,000 ரூபாய், மாவட்ட போட்டிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.