தமிழகத்தில் புதிதாக 24 பொறியியல் கல்லூரி துவங்க அனுமதி
தமிழகத்தில் புதிதாக 24 பொறியியல் கல்லூரி துவங்க அனுமதி
UPDATED : ஆக 27, 2013 12:00 AM
ADDED : ஆக 27, 2013 08:40 AM
அ நிறம் | அளவு
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர், சசிதரூர், ராஜ்யசபாவில், உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில், தற்போது, 498 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. மேலும், புதிதாக இன்ஜினியரிங் கல்லூரி துவங்க அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், நடப்பு கல்வியாண்டில், 24 இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த, கல்லூரிகள், தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் கீழ் இணைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே, இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ள நிலையில், மேலும், 24 கல்லூரிகள் துவங்க, மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது, தமிழக மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
