UPDATED : ஏப் 18, 2026 10:13 AM
ADDED : ஏப் 18, 2026 10:14 AM
அ நிறம் | அளவு
கோவை:
நவஇந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 24வது பட்டமளிப்பு விழா நடந்தது.
ஜி.சி.இ., நிறுவன தலைவர் மற்றும் சி.இ.ஓ., பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர், 'மாணவர்கள் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று முன்னேறுவதுடன், தொழில்முனைவோராகவும் சாதிக்க வேண்டும்,' என்றார்.
விழாவில் இளநிலை, முதுநிலை துறைகளைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, செயலர் பிரியா, முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
