தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருவள்ளூரில் வரும் 25ம் தேதி இரண்டாம் நிலை காவலர் தேர்வு

திருவள்ளூரில் வரும் 25ம் தேதி இரண்டாம் நிலை காவலர் தேர்வு

திருவள்ளூரில் வரும் 25ம் தேதி இரண்டாம் நிலை காவலர் தேர்வு


UPDATED : அக் 19, 2009 12:00 AM

ADDED : அக் 20, 2009 02:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2009 12:00 AM ADDED : அக் 20, 2009 02:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம் பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த தேர்வில், 3,903 பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு கொள்குறிவரை தேர்வாக அமையும். இதற்கான வினாத்தாளில் 80 கேள்விகள் இருக்கும்.

இதில், 50 கேள்விகள் பொது அறிவு சார்ந்தது, 30 கேள்விகள் உளவியல் சார்ந்தது. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் உடற்தகுதி தேர்விற்கு பின்னர் உட்படுத்துவர். மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து தகுதியுள்ள 3,903 விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடிதம் கிடைக்காதவர்கள் வரும் 20ம் தேதிக்குள் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தை அணுகவும். இதுகுறித்து தகவல் மற்றும் அறிவுரை பெற 94454 65728 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எழுத்துத் தேர்விற்கு வரும்போது அழைப்பு கடிதம் எடுத்து வரவேண்டும்.
இத்தகவல் மாவட்ட எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us