தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவர்கள் சேர்ப்பு

மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவர்கள் சேர்ப்பு

மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவர்கள் சேர்ப்பு


UPDATED : ஜூலை 06, 2026 09:55 AM

ADDED : ஜூலை 06, 2026 09:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 09:55 AM ADDED : ஜூலை 06, 2026 09:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 25,840 மாணவ, மாணவியர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னையில், 417 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இதில், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 1.12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இங்கு, மாணவர்களுக்கு சிறப்பான கல்வி, ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இக்கல்வியாண்டில் இது வரை, 25,840 மாணவ, மாணவியர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆய்வு குழு தனியார் பள்ளிகளின் தரத்திற்கு ஏற்ப, மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்த, பாதுகாப்பு தணிக்கை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் கட்டடம் பழுது, போதியளவு மின்விசிறி இல்லாதது, சுற்றுப்புற சுகாதாரம், மாணவர்களின் பாதுகாப்பு தன்மை குறித்து, இக்குழு ஆய்வு செய்யும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us