sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 27 முதல் கோடை விடுமுறை

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 27 முதல் கோடை விடுமுறை

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 27 முதல் கோடை விடுமுறை


UPDATED : ஏப் 23, 2026 06:12 PM

ADDED : ஏப் 23, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 23, 2026 06:12 PM ADDED : ஏப் 23, 2026 06:14 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 27ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:



கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, மாகியில் இன்று (23ம் தேதி) முதல் அடுத்த மாதம் 31ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

அதே போல, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும், தனியார் பள்ளிகளுக்கு வரும் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 31ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் சிறப்பு வகுப்பு மற்றும் எந்த ஒரு வகுப்புகளும் நடத்த கூடாது. கோடை விடுமுறை முடிந்த பிறகு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஏப்ரல் 30ம் தேதி வரை, பள்ளி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த விடுமுறை நாட்களை, பள்ளி திறப்பிற்கு பிறகு ஈடு செய்யப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us