தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னையில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள்

சென்னையில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள்

சென்னையில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள்


UPDATED : மே 28, 2011 12:00 AM

ADDED : மே 28, 2011 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2011 12:00 AM ADDED : மே 28, 2011 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் முதல் மூன்று இடங்களையும் மாணவிகளேப் பிடித்தனர். ஏழ்மையிலும் திறமையாகப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.


எ. ராதிகா, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புல்லா அவென்யூ. 493 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.


அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் தந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டார். தாய் வசந்தா, துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து எங்களை படிக்க வைக்கிறார். மாநிலத்தில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்துப் படித்தேன். சென்னையில் முதலிடம் பிடித்தேன். பிளஸ் 2 வில் முதல் இடம் பிடிக்க முயற்சிப்பேன் என்றார்.


இதேப் பள்ளியில் படிக்கும் வி. அனுசுயா 490  மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் மகளான அனுசுயா, கூறுகையில், என் தந்தை ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். அவர்தான் என்னை படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துவார். மாநில அளவில் ரேங்க் பெற ஆசைப்பட்டேன். பிளஸ் 2 வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ரூப் எடுத்து படித்து மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன் என்றார்.


பெரம்பூரில் உள்ள மாதவரம் நெடுஞ்சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ். பிரவீதா 489 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us