UPDATED : ஆக 27, 2023 12:00 AM
ADDED : ஆக 27, 2023 10:32 AM
அ நிறம் | அளவு
பெங்களூர்:
சந்திரயான் - 3 திட்டத்தின் இரண்டு நோக்கங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது நோக்கமான அறிவியல் சார்ந்த சோதனைகள் நடந்து வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.இது குறித்து சமூக வலைதளத்தில் இஸ்ரோ கூறியுள்ளதாவது:
சந்திரயான் - 3 திட்டத்தின் மூன்று நோக்கங்களில், முதலாவது நோக்கமான லேண்டரை நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக, மென்மையாக தரையிறக்குவது நிறைவேற்றப்பட்டது. அங்கு, லேண்டரிலிருந்து ரோவர் பிரிந்து நிலவில் வலம் வரும் நோக்கமும் நிறைவேற்றப்பட்டது. மூன்றாவது நோக்கமான, ரோவர் நிலவில் மேற்கொள்ள வேண்டிய அறிவியல் சோதனைகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
