புதிய வேலைவாய்ப்பு 30% குறையும்: மாபா சர்வேயில் தகவல்
புதிய வேலைவாய்ப்பு 30% குறையும்: மாபா சர்வேயில் தகவல்
UPDATED : நவ 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
உலக அளவில் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக உள்நாட்டில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவைகள், ரியல் எஸ்டேட், ஹோட்டல் போன்ற தொழில்களைப் பாதிக்கும் என்று மாபா ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
22 துறைகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நிறுவனங்களில் சர்வே மேற்கொள்ளப்பட்டது. 2008ம் ஆண்டில் 10.25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணக்கிடப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிதாக வேலைக்கு எடுப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவே பெரிய நிறுவனங்கள் விரும்புகின்றன. எனினும், இருக்கின்ற பணியாளர்களை ஆட்குறைப்புச் செய்வதைக் கடைசிக் கட்ட நடவடிக்கையாகவே கருதுகின்றன.
ஐ.டி., வங்கிகள், பைனான்சியல் சர்வீசஸ், இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் ஊழியர்களின் சலுகைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பணியாளர்களுக்கான ஊதியம் 28 சதவீதம் அளவுக்குக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொருளாதார நெருக்கடியிலும் பார்மா, ஹெல்த் போன்ற துறைகள் எந்த பாதிப்புக்கும் ஆளாகமல் உள்ளன என்றும் சர்வேயில் தெரியவந்துள்ளது என்கிறார் பாண்டியராஜன்.
