UPDATED : நவ 28, 2015 12:00 AM
ADDED : நவ 28, 2015 11:20 AM
அ நிறம் | அளவு
சென்னை
:
ஐ.டி.ஐ., எனப்படும் தொழில்
பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, வரைபட சாதனங்கள் வழங்க, தமிழக அரசு சார்பில், 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசு சார்பில், ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு, மெட்ரிக் ஸ்கேல், காம்பஸ் உட்பட, ஐந்து வகை பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. நடப்பாண்டு, 28 ஆயிரம் மாணவர்களுக்கு, வரைபட சாதனங்கள் வாங்க, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், வரைபட சாதனங்கள் வாங்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது.
