தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நல்லாசிரியர் விருது 31 பேருக்கு அறிவிப்பு

நல்லாசிரியர் விருது 31 பேருக்கு அறிவிப்பு

நல்லாசிரியர் விருது 31 பேருக்கு அறிவிப்பு


UPDATED : செப் 03, 2023 12:00 AM

ADDED : செப் 03, 2023 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2023 12:00 AM ADDED : செப் 03, 2023 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கர்நாடக அரசின், 2023 - 24ம் ஆண்டிற்கான மாநில அளவிலான நல்லாசிரியர் விருது 31 பேருக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.கர்நாடக மாநில அரசின் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மாநில அளவிலான நல்லாசிரியர் விருது வழங்குவது வழக்கம். இந்த வகையில், 2023 - 24ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டமைக்காக, கர்நாடக அரசு நேற்று நல்லாசிரியர் விருது அறிவித்தது. இதில், தொடக்கப் பள்ளிகளின் 20 ஆசிரியர்களும், உயர்நிலைப்பள்ளியின் 11 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதில், பெங்களூரு ஹெப்பால் கர்நாடக பப்ளிக் பள்ளியின் அறிவியல் ஆசிரியை இந்திரா; மைசூரு நஞ்சன்கூடு அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஹர்ஷா; மைசூரு கே.ஆர்.நகர் அடகனஹள்ளி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் பாஸ்கர்; பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா சிவகங்கே அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை சுஜாதா உட்பட 31 பேர் அடங்குவர்.இவர்களுக்கு, ஆசிரியர் தினமான வரும் 5ம் தேதி பெங்களூரு ஆசிரியர் பவனில் நடக்கும் நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிப்பார். ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us