UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்:
ஆங்கில புத்தாண்டு எப்படி இருக்க வேண்டும் என்று தங்கவயல் தமிழ் சங்கத்தில் நாளை மறுநாள் கருத்தரங்கு நடக்கிறது.அன்று காலை 10:00 மணிக்கு நடக்கும் கருத்தரங்கிற்கு, தங்கவயல் தமிழ் சங்கத் தலைவர் கலையரசன் தலைமை வகிக்கிறார். புரவலர்கள் பேராசிரியர் கிருஷ்ண குமார், அனந்த கிருஷ்ணன், செயல் தலைவர் கமல் முனிசாமி, தீபம் சுப்ரமணி, திருமுருகன் அன்பரசன், ஆர்.வி.குமார், முருகன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.இந்நிகழ்ச்சியில் ஆர்வம் உள்ள பலரும் பங்கேற்று, தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தங்கவயல் தமிழ் சங்கத் தலைவர் கலையரசன் தெரிவித்துள்ளார்.