தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நெல்லை கல்லூரிகளில் 33 பேராசிரியர்கள் நீக்கம்

நெல்லை கல்லூரிகளில் 33 பேராசிரியர்கள் நீக்கம்

நெல்லை கல்லூரிகளில் 33 பேராசிரியர்கள் நீக்கம்


UPDATED : நவ 20, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


திருநெல்வேலி:
நெல்லை கிறிஸ்தவ கல்லூரிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 33 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
நெல்லை சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ சபையின் லே செயலராக தினகர் இருந்தார். அதன் பின்னர் வேதநாயகம் தலைமையில் புதிய அணியினர் போட்டியிட்டு பதவிக்கு வந்தனர். தினகர் லே செயலராக இருந்தபோது பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரிக்கு 13 பேராசிரியைகளையும், பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் 20 பேராசிரியர்களையும் நியமித்தார்.
அப்போது பிஷப் ஜெயபால்டேவிட் வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் வேலைநியமன குழு அமைக்காமல் தன்னிச்சையாக நியமிக்கப்பட்டதாக புதிய அணியினர் தெரிவித்தனர். இதனால் புதிதாக நியமிக்கப்பட்ட 33 பேராசிரியர்களையும் பணிநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகங்கள் உத்தரவிட்டன.
இதுகுறித்து சாராள்தக்கர் மகளிர் கல்லூரி தாளாளர் கேபிரியேல்ராஜன் கூறுகையில், ‘நேர்முகத்தேர்வு நடத்தாமல், சீனியாரிட்டி பார்க்காமல் எந்த அடிப்படையும் இல்லாமல் நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சீனியாரிட்டி இருக்கும் 5 பேரை மட்டும் மீண்டும் பணியில் சேர்க்க உள்ளோம்’, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us