தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில் துவங்குபவர்களுக்கு ரூ.3.7 கோடி நிதி ஒதுக்கீடு: இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

தொழில் துவங்குபவர்களுக்கு ரூ.3.7 கோடி நிதி ஒதுக்கீடு: இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

தொழில் துவங்குபவர்களுக்கு ரூ.3.7 கோடி நிதி ஒதுக்கீடு: இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூலை 01, 2014 12:00 AM

ADDED : ஜூலை 01, 2014 12:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2014 12:00 AM ADDED : ஜூலை 01, 2014 12:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட தொழில் மைய மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டத்தை கடந்த 2012-13ம் ஆண்டு தமிழக அரசு தொடங்கியது. இத்திட்டத்தில் 2014 - 15ம் ஆண்டில் புதிய தொழில் துவங்குபவர்களுக்கு மானியம் வழங்க 3.7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டியில் மூன்று சதவீத மானியமும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில் தொடங்குபவர்களின் திட்டத்தொகை குறைந்தபட்சம் ஐந்து லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை இருக்க வேண்டும்.

பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ., தொழில் பயிற்சி போன்றவை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி பெற்றிருக்க வேண்டும். மேலும் பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் கடனுதவி பெறுபவர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும். ஏற்கனவே மத்திய, மாநில அரசு மூலம் கடனுதவி பெற்றவர்கள், இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற முடியாது.

மேலும் விவரங்களுக்கு, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தொழில் முனைவோர் திட்ட மேலாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us