கடலுார் மாவட்டத்தில் 'குரூப் - 2' தேர்வு கலெக்டர் ஆய்வு
கடலுார் மாவட்டத்தில் 'குரூப் - 2' தேர்வு கலெக்டர் ஆய்வு
UPDATED : நவ 02, 2026 05:49 PM
ADDED : நவ 02, 2026 05:50 PM
கடலுார்:
கடலுார் மாவட்டத்தில் தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் சார்பில் நடந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் - 2 மற்றும் 2 ஏ., தேர்விற்கு, 19,122 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
நடந்த இத்தேர்வில் தாலுகா வாரியாக கடலுாரில் 6,214 தேர்வர்களில் 4,970 பேரும், சிதம்பரத்தில் 4,306 தேர்வர்களில் 3,444 பேரும், குறிஞ்சிப்பாடியில் 2,141 தேர்வர்களில் 1,737 பேரும், பண்ருட்டியில் 2,862 தேர்வர்களில் 2,388 பேரும், விருத்தாசலத்தில் 3,599 தேர்வர்களில் 2,982 பேரும், பங்கேற்றனர். இதில் மொத்தம் 19,122 தேர்வர்களில் 15,521 பேர், தேர்வு எழுதினர்.
இத்தேர்விற்காக கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ஆகிய 5 வருவாய் வட்டங்களில் மொத்தம், 40 தேர்வு மையங்களில், 63 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்வு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நடமாடும் கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படையினர் மற்றும் கருவூலப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், தேர்வு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டன.
ஆய்வின் போது சிதம்பரம் சப் கலெக்டர் வெங்கடேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
