பெண் தொழில்முனைவோருக்கான 'சமாவேஷ்' பயிற்சி திட்டம் துவக்கம்
பெண் தொழில்முனைவோருக்கான 'சமாவேஷ்' பயிற்சி திட்டம் துவக்கம்
UPDATED : மே 15, 2026 04:39 PM
ADDED : மே 15, 2026 04:40 PM
பாலக்காடு:
ஐ.ஐ.டி., பாலக்காட்டின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு அறக்கட்டளையான 'டெக்கின்', ரப்பிலா இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் 'சமாவேஷ்' என்ற பெண் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் ஐ.ஐ.டி., வளாகத்தில் துவங்கியது.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த சிறப்புப் பயிற்சி முகாம், பெண்களிடையே தொழில்முனைவோர் ஆர்வத்தை ஊக்குவிக்கும். பெண்களுக்குத் தொழில் சார்ந்த அறிவு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிந்தனை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் வணிக மேலாண்மை ஆகியவற்றில் நேரடி பயிற்சி அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். 30 பெண் தொழில்முனைவோர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
ஐ.ஐ.டி., பாலக்காடு இயக்குனரும் 'டெக்கின்' தலைவருமான பேராசிரியர் சேஷாத்ரி சேகர் முகாமைத் துவக்கி வைத்தார். விழாவில், ரப்பிலா இன்டர்நேஷனல் நிறுவன நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார், 'டை கேரளா' நிர்வாக இயக்குனர் திவ்யா தலக்கல், ஐ.ஐ.டி., பாலக்காடு டீன் டாக்டர் அரவிந்த் அஜோய், இணை டீன் டாக்டர் விவேக் சதுர்வேதி, 'டெக்கின்' முதன்மை செயல்பாட்டு அதிகாரி மிது உன்னிதான் உட்பட பலர் பங்கேற்றனர்.
