UPDATED : அக் 26, 2026 06:01 PM
ADDED : அக் 26, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
அவிநாசி:
'விழுதுகள்' தன்னார்வ அமைப்பு சார்பில், துாய்மை பணியாளர் குடும்பங்களைச் சேர்ந்த கல்லுாரி செல்லும், 20 மாணவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் வீதம், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
அவிநாசியில் நடந்த நிகழ்ச்சியில், திட்ட மேலாளர் சந்திரா வரவேற்றார். அதன் நிறுவனர் தங்கவேல் தலைமை வகித்தார்.
திட்ட மேலாளர் கோவிந்தராஜ், துாய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு, அரசு நலத்திட்டங்கள் குறித்து பேசினார். கள ஒருங்கிணைப்பாளர் சுதா நன்றி கூறினார்.
