UPDATED : பிப் 10, 2025 12:00 AM
ADDED : பிப் 10, 2025 09:11 AM

திருப்பூர் :
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் அட்மிஷன் நடத்தப்படுகிறது.
தேசிய தேர்வுகள் முகமை ஒவ்வொரு ஆண் டும் நீட் தேர்வை நடத்துகிறது. நடப்பு, 2025ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே, 4ல் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.
தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறவுள்ளது. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 7 வரை தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான கட்டணம் பொதுப்பிரிவுக்கு, 1,700 ரூபாய், பிற்படுத்தப்பட்டோருக்கு, 1,600 ரூபாய், எஸ்.சி.,--எஸ்.டி., உட்பிரிவுக்கு, ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.