தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறனாளிகளுக்கு குரூப் 4 தேர்வு

மாற்றுத்திறனாளிகளுக்கு குரூப் 4 தேர்வு

மாற்றுத்திறனாளிகளுக்கு குரூப் 4 தேர்வு


UPDATED : ஆக 06, 2011 12:00 AM

ADDED : ஆக 06, 2011 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2011 12:00 AM ADDED : ஆக 06, 2011 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்லில், மாற்றுத்திறனாளிகளுக்கு டி.என்.பி.எஸ்.ஸி., குரூப் 4 சிறப்பு தேர்வு ஆகஸ்ட் 7ம் தேதி நடக்க உள்ளது என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான டி.என்.பி.எஸ்.ஸி., குரூப் 4 சிறப்பு தேர்வு நாளை நடக்க உள்ளது. அத்தேர்வு, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது. 206 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வின்போது, தேர்வு எழுதும் நபர்கள், தேர்வாணையம் விதித்துள்ள விதிமுறையை மீறாமல் தேர்வு எழுத வேண்டும். தேர்வு மையத்தில், தேர்வாணைய விதிமுறைகளை மீறுபவர்கள், வரும் காலங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு தடை விதிக்கக்கூடும். அனைத்து விண்ணப்பதாரர்களும், தேர்வாணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு எழுத வேண்டும்.

தேர்வுக்கான அடையாள அட்டை கிடைக்கப் பெறாதவர்கள், டி.என்.பி.எஸ்.ஸி., இணையதளத்தில், தங்களது விண்ணப்ப விவரங்களை சரிபார்க்க வேண்டும். விண்ணப்பம் ஏற்கப்பட்டது என்ற விவரம் கிடைக்கப்பெற்றால், அதன் நகலை டவுன்லோடு செய்து, அதில் பாஸ்போர்ட் அளவு ஃபோட்டோ ஒட்டி, குரூப் ஏ அல்லது பி அந்தஸ்தில் உள்ள அலுவலர்களிடம் கையெழுத்து பெற்று வரவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us