UPDATED : மார் 17, 2026 03:06 PM
ADDED : மார் 17, 2026 03:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்:
சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் 42ம் ஆண்டு விழா நடந்தது.
வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், சக்கரவர்த்தி, சந்திரசேகர், ஓய்வூதியர் சங்கத் தலைவர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர். பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம், நடனம், மாறுவேடப் போட்டி, ஓரங்க நாடகம் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற விஜயகுமார், இன்னர்வீல் கிளம் இந்துமதி, ஆசிரியர் லட்சுமிபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

