UPDATED : அக் 22, 2024 12:00 AM
ADDED : அக் 22, 2024 09:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் :
சூலுார் பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் மற்றும் சாலை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.௪.௪௭ கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தளபதி முருகேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், பேரூராட்சி தலைவர் தேவி, துணைத்தலைவர் கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். செயல் அலுவலர் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.