sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகின் டாப் 50 பல்கலையில் இந்திய கல்வி நிறுவனங்கள்

உலகின் டாப் 50 பல்கலையில் இந்திய கல்வி நிறுவனங்கள்

உலகின் டாப் 50 பல்கலையில் இந்திய கல்வி நிறுவனங்கள்


UPDATED : மார் 27, 2026 01:46 PM

ADDED : மார் 27, 2026 02:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2026 01:46 PM ADDED : மார் 27, 2026 02:06 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
பிரிட்டனைச் சேர்ந்த, 'குவாக்கரெலி சைமன்ட்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ள 16வது ஆண்டுக்கான பாடவாரியான உலக பல்கலை தரவரிசையில், நம் நாட்டின் சென்னை உட்பட நான்கு ஐ.ஐ.டி.,கள், ஜவஹர்லால் நேரு பல்கலை மற்றும் பிட்ஸ் பிலானி கல்வி நிறுவனங்கள் உலகின் முதல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

உலகளவில் பல்கலைகளின் கல்வித் தரத்தை, 'குவாக்கரெலி சைமன்ட்ஸ்' என்ற பிரிட்டன் நிறுவனம் மதிப்பிடுகிறது. பாடவாரியான தரவரிசையின் 16வது ஆண்டு பட்டியலை வெளியிட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 1,900 பல்கலைகளில், நடைமுறையில் உள்ள 21,000க்கும் அதிகமான பாட திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

இது, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், உயிரியல் மற்றும் மருத்துவம், கலை மற்றும் மனிதவியல் உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைகளை அடிப்படையாக கொண்டது.

நம் நாட்டைச் சேர்ந்த 12 பல்கலையின், 27 பாடங்கள் இந்த ஆண்டுக்கான தரவரிசையில் இடம்பெற்றுள்ளன. இவை, தரவரிசையில் முதல் 50 இடங்களில் வந்துள்ளன. கடந்த ஆண்டு 12 பாடங்கள் மட்டுமே இந்த தரவரிசையில் இடம்பெற்றிருந்தது. ஐ.ஐ.எம்., ஆமதாபாத், மேலாண்மை மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் 21வது இடத்தைப் பிடித்துள்ளது. ஐ.ஐ.டி., டில்லி ஆறு பாடங்களில் டாப் 50 இடங்களைப் பெற்றுள்ளது.

மேலும் சென்னை, கரக்பூர் மற்றும் மும்பை ஐ.ஐ.டி.,கள், ஜவஹர்லால் நேரு பல்கலை மற்றும் பிட்ஸ் பிலானி ஆகிய கல்வி நிறுவனங்களின் பாடமும் உலகின் முதல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ளன.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us