UPDATED : நவ 24, 2025 07:51 PM
ADDED : நவ 24, 2025 07:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபுஜா:
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பள்ளி ஒன்றில், நேற்று முன்தினம் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், 303 மாணவர்களையும், 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றது.
இந்நிலையில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்களில் 50 பேர் கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பி, தங்கள் பெற்றோரிடம் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளதாக, பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் தவிர மீதமுள்ள 253 பள்ளி மாணவர்கள், 12 ஆசிரியர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

