தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தி தேர்வில் 6 லட்சம் பேர் பங்கேற்பு

இந்தி தேர்வில் 6 லட்சம் பேர் பங்கேற்பு

இந்தி தேர்வில் 6 லட்சம் பேர் பங்கேற்பு


UPDATED : மே 23, 2011 12:00 AM

ADDED : மே 23, 2011 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2011 12:00 AM ADDED : மே 23, 2011 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில், ஒரே ஆண்டில் ஆறு லட்சம் பேர் இந்தி தேர்வை எழுதி வருகின்றனர், என, தஷிண பாரத இந்தி பிரசார சபா பொதுச் செயலர் அண்ணாமலை தெரிவித்தார்.


திருச்சி தென்னூர் தஷிண பாரத இந்தி பிரசார சபா சார்பில், பவள விழா துவக்க விழா, சபா வளாகத்தில் நடந்தது. விழாவில், தமிழ்நாடு தஷிண பாரத இந்தி பிரசார சபா முதல் உப தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார்.


விழாவில், தஷிண பாரத இந்தி பிரசார சபா சென்னை பொதுச் செயலர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில், 75 ஆண்டுகளாக இந்தி பிரசாரம் இனிதே நடந்து வருகிறது. சுதந்திரத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ள இந்தி மொழிக்கு, தென் மாநிலங்களில் தமிழகத்தில் பிரசார சபா அமைக்கப்பட்டால்தான் சிறப்பாக வளரும் என, எண்ணிய மகாத்மா காந்தி, முதலில் சென்னையில் நிறுவினார்.


தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் பிரவேஷிகா தேர்வை எழுதி வருகின்றனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் ஒரே ஆண்டில் ஆறு லட்சம் பேர் இந்தி தேர்வை எழுதி வருகின்றனர். இந்தி பிரசாரம் தான் விடுதலைக்கு பெரும் உதவியாக இருந்தது. இந்த நான்கு மாநிலங்களிலும் இந்தி பிரசாரம் நடைபெற்று வந்தாலும், தமிழகத்தில் தான் பவள விழா கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us