தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி வளாகத்தில் 6 மாணவர்கள் தற்கொலை முயற்சி

பள்ளி வளாகத்தில் 6 மாணவர்கள் தற்கொலை முயற்சி

பள்ளி வளாகத்தில் 6 மாணவர்கள் தற்கொலை முயற்சி


UPDATED : ஆக 09, 2013 12:00 AM

ADDED : ஆக 09, 2013 09:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2013 12:00 AM ADDED : ஆக 09, 2013 09:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் ஹைஸ்கூல் சாலையில், கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. சென்ற வாரம், பள்ளி ஆசிரியர் ஒருவரையும், ஆசிரியை ஒருவரையும் இணைத்து, பள்ளி வகுப்பறை, அலுவலர் அறை மற்றும் கழிவறைகளில், தவறாக சித்தரித்து எழுதப்பட்டிருந்தது.

அதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில், பிளஸ் 1, கலைப் பிரிவு மாணவர்கள், இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. நேற்று நண்பகல், 12:00 மணியளவில், கலைப் பிரிவில் படிக்கும் ஆறு மாணவர்களிடம், பள்ளித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் தலைமையாசிரியர் கிருபாகரன் தலைமையிலான ஆசிரியர்கள், விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில், ஆறு மாணவர்களும், பெற்றோரை அழைத்து வந்து, பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் செல்ல உத்தரவிடப்பட்டது. மனமுடைந்த, ஆறு மாணவர்களும், பள்ளி அருகே உள்ள கடையில், எறும்பு பவுடரை வாங்கி, தண்ணீரில் கலக்கி குடித்தனர். சிறிது நேரத்தில், வாயில் நுரை தள்ளியபடி, மயங்கி விழுந்தனர். உடனடியாக ஆறு மாணவர்களும், ப.வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாணவர்கள் கூறியதாவது: பள்ளி வளாகத்தில், ஆசிரியர்களை பற்றி தவறுதலாக நாங்கள் எழுதவில்லை. எனினும், நாங்கள் ஆறு பேரும் எழுதியிருப்பதாக ஆசிரியர்கள் சந்தேகித்து, கண்டித்தனர்.

பெற்றோர் பற்றியும் விசாரணையின் போது தவறாக பேசியதோடு, டி.சி., வாங்கி செல்லும்படியும் தெரிவித்தனர். அதனால் செய்வதறியாது, பூச்சி மருந்தை குடித்து விட்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளி துணைத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன் கூறுகையில், "இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம். கண்டிப்பு செய்ததால் விஷம் குடித்தது போல், நாடகம் போடுகின்றனர்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us