UPDATED : ஜன 05, 2026 05:10 PM
ADDED : ஜன 05, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
சென்னை:
சுவாமி விவேகானந்தா ஆல் ஸ்போர்ட்ஸ் சங்கம் மற்றும் சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூடம் அறக்கட்டளை இணைந்து, சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியை, ஆலந்துார் மான்போர்ட் பள்ளியில் நேற்று முன்தினம் நடத்தினர்.
பல்வேறு நாடுகளில் இருந்து, 600க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர். அதிகப்படியாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம் பகுதியைச் சேர்ந்தோர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி, பதக்கங்களை வென்றனர்.
