UPDATED : அக் 25, 2011 12:00 AM
ADDED : அக் 25, 2011 03:16 PM
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் 60,000 காலியிடங்கள் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு செயலாளர் டைமன்ட் உத்திரராஜ் கூறியுள்ளார். நாகர்கோவிலில் மேலாண்மைத் துறை தொடர்பான தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பங்கேற்ற அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரகளின் மாணவர் சேர்க்கைப் பிரவு செயலாளர் ரைமன்ட் உத்திரராஜ் பேசுகையில், உயர்கல்வியில் கிராமப்புற மாணவர்கள் அதிக இடங்களை வகிக்கின்றனர். இதில் தமிழ் மீடியத்தில் படித்து வருபவர்களும் உள்ளனர். குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகள் 61 சதவீதம் உள்ளனர். இவர்கள் நகர்ப்புற மாணவர்களை எதிர்கொள்வது சவாலாக உள்ளது. ஆனால் முன்னேற்றத்தை அடைய கடுமையாக உழைக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு எதுவும் தடையாக இருக்க முடியாது. மாணவர்கள் எதையும் சாதிக்கலாம். சாதிப்பதற்கு வானமே உங்களுக்கு எல்லை. மாணவர்களுக்கு நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். நேர்மறையான எண்ணங்களே மேலோங்கி நிற்க வேண்டும். உங்களது கேரக்டர் எப்படியோ அப்படியே வாழ்க்கையும் இருக்கும். அதனால் கல்லூரியில் நல்ல நண்பர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். நவீன தொழில்நுட்பத்தில் எத்தனையோ நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் நல்ல உண்மையான நண்பர்களை தேர்வு செய்வது மிகவும் அவசியம் என்று மாணவர்களிடையே பேசினார். தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் ஒன்றரை லட்சம் மாணவ சேர்க்கை இடங்களில் 1.10 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின. 44 ஆயிரம் இடங்கள் காலியாகவே உள்ளன. அதேப்போல, நிர்வாக ஒதுக்கீட்டிலும் 16க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. ஆக மொத்தம் சேர்த்து இந்த கல்வியாண்டில் 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
