UPDATED : ஆக 01, 2011 12:00 AM
ADDED : ஆக 01, 2011 05:34 PM
அ நிறம் | அளவு
ஜுலை 8ம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் இடங்கள்
, அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவ சேர்க்கை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.இதில் அண்ணா பல்கலைக்கழகத்தில்
6457 மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்வு செய்துள்ளனர். தற்போது காலியாக உள்ள 1128 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதேப்போல அரசு பொறியியல் கல்லூரிகளில் 4549 இடங்கள் நிரம்பிவிட்டன. இன்னும் 5 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. எஸ்சிஏ பிரிவினருக்குகான இடம் 4ம், எஸ்.டி. பிரிவினருக்கான இடம் 1ம் காலியாக உள்ளன.சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இதுவரை
56,230 மாணவர்கள் சேர்க்கை பெற்றுவிட்டனர். இன்னமும், 79231 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக இருக்கும் பொறியியல் சேர்க்கை இடங்கள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.மீதமுள்ள இடங்கள்
, ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும் பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடைபெறும் துணைக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.