தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆர்.கே.நகர் தொகுதியில் ஐ.டி.ஐ.,ரூ.7 கோடிக்கு அரசு ஒப்புதல்

ஆர்.கே.நகர் தொகுதியில் ஐ.டி.ஐ.,ரூ.7 கோடிக்கு அரசு ஒப்புதல்

ஆர்.கே.நகர் தொகுதியில் ஐ.டி.ஐ.,ரூ.7 கோடிக்கு அரசு ஒப்புதல்


UPDATED : அக் 24, 2015 12:00 AM

ADDED : அக் 24, 2015 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2015 12:00 AM ADDED : அக் 24, 2015 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற சென்னை
, ஆர்.கே.நகரில், தொழிற் பயிற்சி நிறுவனமான, ஐ.டி.ஐ., அமைக்க, ஏழு கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில், 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உருவாகும் தொழில் நிறுவனங்களுக்கு, திறன் மிக்க தொழிலாளர்கள் தேவை என்பதால், ஆர்.கே.நகர் தொகுதியில், ஐ.டி.ஐ., துவங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி, 40வது வட்டம், காமராஜர் சாலை, அருணாச்சலேஸ்வரர் கோவில் தெருவில் துவங்கப்படுகிறது. ஐ.டி.ஐ.,க்கான ஆசிரியர்கள், ஆசிரியர் இல்லாத பணியிடங்கள், தேவையான தளவாட பொருட்கள் வாங்குதல் மற்றும் கட்டடம் கட்டும் பணிக்காக, ஏழு கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதலும் வழங்கி உள்ளார்.

இந்த நடவடிக்கைகள், தொலைநோக்குத் திட்டம் -2023 இலக்கின் படி, திறன் மிகுந்த மனித வளம் உருவாக வழி வகை செய்யும் என, தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us