UPDATED : நவ 21, 2024 12:00 AM
ADDED : நவ 21, 2024 03:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு:
மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் எத்தனை நாட்கள் விடுமுறை உள்ளது என கணக்கிடுவது வழக்கம். அதிக நாட்கள் விடுமுறை என்றால் குஷியாக இருப்பர்.
வரும் டிசம்பர் மாதத்தில் மொத்தம் 31 நாட்கள். இவற்றில், 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகள் ஞாயிற்றுக்கிழமை். 14ல் ஹீத்ரி எனும் அறுவடை திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
டிச., 25 கிறிஸ்துமஸ். இதை முன்னிட்டு 24, 26 ஆகிய தேதிகளிலும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆக மொத்தம் கூட்டி, கழித்துப் பார்த்தால் மொத்தம் எட்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது.
விடுமுறை எண்ணிக்கையை கணக்கிட்டு, மாணவர்கள் குதுாகலித்து உள்ளனர்.