தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வி படிக்க 82 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித் தொகை!

உயர்கல்வி படிக்க 82 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித் தொகை!

உயர்கல்வி படிக்க 82 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித் தொகை!


UPDATED : அக் 29, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

12ம் வகுப்புத் தேர்வில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற பொருளாதாரரீதியாக வருவாய் குறைவுள்ள மாணவர்கள் உயர்கல்வி படிக்க உதவும் வகையில் இந்த உதவித் தொகையை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வழங்குகிறது. மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.


கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்புகளைப் படிக்கும் 41 ஆயிரம் மாணவர்கள், 41 ஆயிரம் மாணவிகளுக்கு இந்தக் கல்வித் தொகை வழங்கப்படும். இன்ஜினியரிங், மருத்துவப் பட்டப் படிப்பு மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.


சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. மற்றும் மாநில கல்வி போர்டுகள் வாயிலாக படித்த மாணவர்கள் இந்தக் கல்வி உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள். 3:2:1 என்ற விகிதப்படி அறிவியல், வணிகவியல், கலைப்புல படிப்புகளைப் படித்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சி.பி.எஸ்.இ., மூலம் படித்த இந்தக் கல்வி உதவித் தொகை பெறத் தகுதியுடைய 18,745 மாணவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகள் மூலம் கடிதங்கள் தரப்பட்டுள்ளன. இந்த கல்வி உதவித் தொகை  பெற விரும்பும் மாணவர்கள் நவம்பர் 5ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ., செயலாளர் வினித் ஜோஷி தெரிவித்துள்ளார்.


விவரங்களுக்கு: www.cbse.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us