புயல் முன்னெச்சரிக்கை: 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
புயல் முன்னெச்சரிக்கை: 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
UPDATED : நவ 30, 2024 12:00 AM
ADDED : நவ 30, 2024 08:28 AM

சென்னை:
அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவ.,30) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக, நேற்று ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது, இன்று ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாவட்டங்களில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.