UPDATED : டிச 24, 2014 12:00 AM
ADDED : டிச 24, 2014 11:49 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் ஜன., 9ல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் வேலை வாய்ப்புத்துறை சார்பில் மெகா வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது: இதில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி மற்றும் தவறியவர்கள் பிளஸ் 2, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்த வேலையில்லாத இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
மதுரை உட்பட தென்மாவட்டங்களிலுள்ள வேலையளிப்பவர்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை நேரடியாக தேர்வு செய்யலாம்.
நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஊழியர் விவரங்களை deomadurai@gmail.com என்ற இமெயில் வாயிலாக தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0452-256 6359ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
