தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கைதிகளுக்கு கல்வி: 9 சிறைகள் தேர்வு

கைதிகளுக்கு கல்வி: 9 சிறைகள் தேர்வு

கைதிகளுக்கு கல்வி: 9 சிறைகள் தேர்வு


UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM

ADDED : ஜூலை 08, 2023 09:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM ADDED : ஜூலை 08, 2023 09:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
தமிழகத்தில் எழுத படிக்கத் தெரியாத கைதிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு அளிக்க கல்வித்துறை சார்பில் 9 மாவட்ட சிறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் சார்பில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டம் தோறும் கல்வியறிவு இல்லாதவர் கணக்கெடுக்கப்பட்டு ஆண்டுக்கு குறைந்தது 10 ஆயிரம் பேருக்கு கல்வியறிவு அளிக்கப்படுகிறது.இத்திட்டத்தை சிறைக் கைதிகளுக்கு விரிவுபடுத்தும் வகையில் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம், வேலுார், கடலுார், திருவள்ளூர், புதுக்கோட்டை சிறைகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு, இவற்றில் 200 பெண்கள் உட்பட 1249 கைதிகள் கல்வியறிவு இல்லாதவர் என கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு செப்., முதல் வாரம் முதல் அந்தந்த சிறையிலேயே வகுப்பு நடத்தப்படவுள்ளது.கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 
சிறைத்துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கைதிகள் கைநாட்டு வைப்பதில் இருந்து தங்கள் பெயர் எழுதும் வகையில் அவர்களுக்கு எழுத்தறிவும், எண்கள், கூட்டல், கழித்தல் உட்பட அடிப்படை எண்ணறிவு அளிக்கப்படும்.கல்வித்துறை திட்டப் பணிகளில் உள்ள தன்னார்வலர், படித்த சிறைக் கைதிகள் மூலம் இவர்களுக்கு தினம் 2 மணி நேரம் என 6 மாதங்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படும். இதற்கான பாடப்புத்தகம் இலவசமாக வழங்கப்படும். இறுதியில் மதிப்பீடு தேர்வு வைத்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதுதொடர்பாக சிறைத்துறை, கல்வித்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் ஜூலை 10ல் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us