UPDATED : டிச 10, 2009 12:00 AM
ADDED : டிச 10, 2009 05:45 PM
கேம்பஸ் இன்டர்வியூ தொடங்கிய முதல் நாளே அதிகபட்சமாக இந்த அளவுக்கு ஊதியம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டிசைன் மாணவருக்கு ரூ.7 லட்சம் அளவில் ஊதியம் கிடைத்துள்ளது.
இந்த ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கு 65 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 31 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு நன்கு உள்ளது.
கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டில் புதிதாக பல நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களைத் தேர்வு செய்ய முன்வந்துள்ளன என்று மாணவர் வேலைவாய்ப்புப் பிரிவு அதிகாரி சுஜாதா நாயர் தெரிவித்தார்.
இன்போசிஸ், ஹோண்டா, டாடா இன்டர் ஆக்டிவ் சிஸ்டம், கோத்ரேஜ், பாய்ஸ், கிளாஸ்கோ, பஜாஜ் ஆட்டோ, டி.ஐ. சைக்கிள்ஸ், மதுரை கார்மெண்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்ய நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டிசைன் நிறுவனத்திற்கு வந்துள்ளன.
