UPDATED : செப் 11, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அத்துடன் பஸ்ஸின் பக்கவாட்டில், மாணவர்கள் பயணம் செய்யும் வாகனம் என்பதைக் குறிப்படும் வகையில் சின்னங்களை வரைய வேண்டும் எனவும் அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் செல்லும் வாகனங்களை தனித்து அடையாளம் காட்டும் வகையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
பள்ளிக்கூட பஸ்களின் முன் மற்றும் பின் பகுதியில் மேலே பள்ளிப் பேருந்து எனவும், கல்லூரி பஸ்களின் முன் மற்றும் பின் பகுதியில் மேலே கல்லூரிப் பேருந்து எனவும் எழுத வேண்டும் என அரசு கூறியுள்ளது. பஸ்களின் பக்கவாட்டில் 60 செ.மீ. விட்டத்தில், குழந்தைகள் நடந்து செல்வதைப் போன்ற படத்துடன் பள்ளிப் பேருந்து என்ற வாசகம் இடம் பெற வேண்டும். அதேபோல கல்லூரிப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் இருப்பதைப் போன்ற படமும், கல்லூரிப் பேருந்து என்ற வாசகமும் இடம் பெற வேண் டும்.
இந்த பஸ்களின் முன் மற்றும் பின் புறங்களில் இதே போன்ற சின்னங்கள் 20 சென்டி மீட்டர் விட்டத்தில் இடம் பெற வேண்டும். இவை கருநீல நிற பெயிண்டால் வரைந்து எழுதப்பட வேண்டும். ஏற்கெனவே உபயோகத்தில் உள்ள பஸ்களின் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படும்போது இந்த விதிகளின்படி பெயிண்ட் அடிக்க வேண்டும்.
பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ, ஷேர் ஆட்டோ மற்றும் ஒப்பந்த வாகனங்களில் பள்ளிக் குழந்தைகள் என்று எழுதப்பட வேண்டும் என்றும் தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் எஸ். மாலதி பிறப்பித்துள்ள ஆணையில் தெரிவித்துள்ளார்.