127 இன்ஜியரிங் கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி!
127 இன்ஜியரிங் கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி!
UPDATED : செப் 15, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மீதமுள்ள 127 பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் 50 சதவீதத்திற்கும் குறைவு.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த இன்ஜினியரிங் படிப்புகளின் தேர்வு முடிவுகள் குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களிலிருந்து இது தெரிய வந்துள்ளது.
இத்தேர்வுகளில் 9 கல்லூரிகளில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன. முதல் இடத்தைப் பெற்றுள்ள சிவகாசி மெப்கோ ஷெல்ங்க் இன்ஜினியரிங் கல்லூரியில் 88.74 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதையடுத்து இரண்டாவதாக உள்ள சென்னை எஸ்.எஸ்.என்., இன்ஜினியரிங் கல்லூரியில் தேர்ச்சி விகிதம் 87.96.
80 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள மற்ற கல்லூரிகள் விவரம்:
கொங்கு பொறியியல் கல்லூரி (85.86%), இன்ஸ்டிட்யூட் ஆப் ரோடு டிரான்ஸ்போர்ட் அண்ட் டெக்னாலஜி (85.11%), மீனாட்சி சுந்தரராஜன் இன்ஜினியரிங் கல்லூரி (84.06%), அருள்மிகு கலசலிங்கம் இன்ஜினியரிங் கல்லூரி (81.94), வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி(81.44%), பன்னாரி அம்மன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (81.2%), சாரநாதன் இன்ஜினியரிங் கல்லூரி (80.7%).
69 பொறியியல் கல்லூரிகளில் 60 சதவீதத்திற்கு மேலும் 115 கல்லூரிகள் 50 சதவீதத்திற்கு மேலும் தேர்ச்சி பெற்றுள்ளன. 127 கல்லூரிகள் 50 சதவீதத்திற்கும் குறைவாகத் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன. 32 கல்லூரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகித்தைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் கடைசி நிலையில் இடம் பெற்றுள்ள ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியின் தேர்ச்சி விகிதம் 5.88 சதவீதமே!
பாடவாரியாக தேர்ச்சி விகிதத்தைப் பார்க்கும்போது 51 பாடப்பிரிவுகளில் மாணவர்கள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளனர். பாடத்தாள்களின் எண்ணிக்கையை வைத்து தேர்ச்சி விகிதத்தைப் பார்க்கும்போது எஸ்.எஸ்.என்., கல்லூரியும் மீனாட்சி சுந்தரராஜன் இன்ஜினியரிங் கல்லூரியும் 95.4 சதவீத தேர்ச்சியைப் பெற்று முதல்நிலையில் உள்ளன. அதையடுத்த நிலையில் உள்ள மெப்கோ ஷெல்ங்க் இன்ஜினியரிங் கல்லூரியில் தேர்ச்சி விகிதம் 94.88.
தேர்வுகளில் எந்த பொறியியல் கல்லூரி எந்த அளவுக்கு தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
