தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காஸ்ட் அக்கவுண்டன்ட்ஸ்: மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் தர நிறுவனங்கள் போட்டி!

காஸ்ட் அக்கவுண்டன்ட்ஸ்: மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் தர நிறுவனங்கள் போட்டி!

காஸ்ட் அக்கவுண்டன்ட்ஸ்: மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் தர நிறுவனங்கள் போட்டி!


UPDATED : செப் 21, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டுக்கு குறைந்தபட்ச சம்பளமே ரூ.5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னையில் நடைபெறும் கேம்பஸ் இன்டர்வியூவில் விப்ரோ, ஐ.டி.சி., ஸ்டெர்லைட், ஈடிஏ ஸ்டார் குரூப், பெல், டி.வி.எஸ்., குரூப், ஈ.ஐ.டி., பாரி, அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்ளும் வளைகுடா நாடுகளிலிருந்து சில நிறுவனங்களும் இதில் பங்கேற்று சி.எம்.ஏ.,களை தேர்வு செய்ய உள்ளன. 300 மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைகளைப் பெற பதிவு செய்துள்ளனர்.


உலகமயமாக்கல் பொருளாதார சூழ்நிலையில் காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட்ஸ்களின் (சி.எம்.ஏ.,) தேவை அதிகமாகியுள்ளது. இந்நிலையில், சி.எம்.ஏ., படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் கேம்பஸ் இன்ட்வியூ மூலம் வேலை கிடைத்துவிடுகிறது என்கிறார் ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ. அமைப்பின் தென் மண்டல கவுன்சில் தலைவர் ஓம் பிரகாஷ்.


கடந்த ஆண்டில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் 181 பேர் பங்கேற்றனர். அதில் 144 பேருக்கு வேலை கிடைத்தது. மீதமுள்ள 37 பேரும் ஏற்கெனவே வேலைவாய்ப்பை பெற்றிருந்ததால், இந்த கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பை பெற விரும்பவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.


கடந்த ஆண்டில் இந்த மாணவர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.3.5 லட்சம். அதிக பட்ச சம்பளம் ரூ.11 லட்சம். இந்த ஆண்டில் குறைந்தபட்ச சம்பளமாக ரூ.5 லட்சமும் அதிகபட்ச சம்பளமாக ரூ.12 லட்சம் இருக்கும். அதாவது அதிகபட்ச சம்பளம் பெறும் மாணவர் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று உதவி இயக்குநர் சண்முகம் தெரிவித்தார்.


காஸ்ட் அக்கவுண்டன்ட்டுகளின் தேவை 30 ஆயிரத்துக்கு மேல் உள்ள சூழ்நிலையில், காஸ்ட் அக்கவுண்ட் டெக்னிஷியன் என்ற சான்றிதழ் படிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஓம் பிரகாஷ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us