UPDATED : செப் 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் இதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கும் இடையே உள்ள இடம் ஐ.ஐ.எம்., அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசுக்கு வழங்கப்படும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ தெரிவித்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 350 ஏக்கர் நிலம் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது ஐ.ஐ.எம்., கல்வி நிலையம் அமைக்க 100 ஏக்கர் நிலம் வழங்கப்படுகிறது.
