ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இந்தியா பற்றிய படிப்பு!
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இந்தியா பற்றிய படிப்பு!
UPDATED : செப் 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துவரும் சூழ்நிலையில் இந்தியா பற்றி அறிந்து கொள்ள மாணவர்களிடம் ஆர்வத்தை அடுத்து இந்த புதிய படிப்புத் தொடங்கப்பட்டுள்ளது.
வருகிற அக்டோபர் 6ம் தேதி தேதி தொடங்கப்படும் இந்தப் படிப்பில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
சர்வதேச உறவுகள், பிராந்திய அரசியல், கலாசாராம், மனிதவள மேம்பாடு, அரசியல் பொருளாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா பற்றிய விஷயங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும். மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டியதும் அவசியம்.
இந்தியா பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்தப் படிப்பு மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் துறை பேராசிரியர் பார்பரா ஹாரீஸ் வைட் தெரிவித்துள்ளார்.
தனியார் துறை, பன்னாட்டு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், மீடியா நிறுவனங்கள் போன்றவற்றில் இப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா பற்றிய ஆய்வை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்த முதுநிலைப் படிப்பு ஒரு படிக்கல் போன்று இருக்கும் என்கிறார்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்.
புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் பிரதமர் மன்மோன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
