தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுத் தேர்வுகளுக்கு கூடுதலாக 5 நிமிடம் வழங்கத் திட்டம்!

பொதுத் தேர்வுகளுக்கு கூடுதலாக 5 நிமிடம் வழங்கத் திட்டம்!

பொதுத் தேர்வுகளுக்கு கூடுதலாக 5 நிமிடம் வழங்கத் திட்டம்!


UPDATED : செப் 28, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி பொதுத் தேர்வுகளில், வினாத்தாளை படித்து புரிந்து கொள்வதற்காக ஏற்கெனவே 10 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது விடைத்தாளில் பதிவு எண்களைப் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பணிகளைப் பதற்றமில்லாமல் செய்வதற்காக மேலும் 5 நிமிடம் கூடுதலாக ஒதுக்கீடு செய்வதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு இரண்டரை மணி நேரமும் பிளஸ்2 தேர்வுக்கு மூன்று மணி நேரமும் வழங்கப்படுகின்றன.


மாணவர்கள் பதற்றமில்லாமல் தேர்வு எழுதுவதற்கு ஏற்ப தேவையான மாற்றங்களை செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தேர்வுத்துறை, பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். எழுத்துத் தேர்வுக்குப்பின் செய்முறைத் தேர்வுகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.


எழுத்துத் தேர்வுக்குப் பிறகு செய்முறைத் தேர்வை நடத்துவது குறித்தும் கூட்டத்தில விவாதிக்கப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களும் வரும் மார்ச் பொதுத் தேர்வில் இருந்து அமல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.


இந்தத் திட்டங்களை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருவதற்காக விரைவில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அந்தக் குழு தரும் அறிக்கையில் அடிப்படையில் அரசு முடிவு எடுக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


பிளஸ் டூ தேர்வு முடிவுக்குப் பிறகு இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட முக்கியப் பாடங்களில் விடைத்தாள் நகல் பெறுவதற்கும் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்யவும் தற்போது வசதி இருக்கிறது. இந்தப் பாடங்களின் வரிசையில், வணிகவியல், கணக்குப் பதிவியல் பாடங்களும் இனி இடம் பெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us