ஸ்டான்போர்டு பல்கலை. பேராசிரியருக்கு ராமானுஜன் விருது
ஸ்டான்போர்டு பல்கலை. பேராசிரியருக்கு ராமானுஜன் விருது
UPDATED : செப் 29, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
27 வயது ஆகும் அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதை சாஸ்திரா பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்து பெறும் அக்ஷய் வெங்கேடசுக்கு ரூ.10 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும். கணிதமேதை ராமானுஜனின் சொந்த ஊரான கும்பகோணத்தில் சாஸ்திரா பல்கலைக்கழக வளாகத்தில் டிசம்பர் 20ம் தேதியிலிருந்து 22ம் தேதி வரை நடைபெறும் நம்பர் தியரி குறித்து நடைபெறும் சர்வதேச மாநாட்டில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும்.
1998ல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பீட்டர் சர்நாக் தலைமையில் பிஎச்.டி. ஆய்வை மேற்கொண்டார் அக்ஷய். 2002ல் பிஎச்.டி., முடித்த பிறகு எம்.ஐ.டி.,யில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். அதை அடுத்து, நியூயார்க்கில் கோரன்ட் இன்ஸ்டிட்யூட் ஆப் மேத்மேட்டிக்கல் சயின்சஸ் கல்வி நிலையத்தில் இணைப் பேராசிரியரானார். 2007ல் சேலம் பரிசு, பேக்யார்டு பெல்லோஷிப் ஆகியவற்றை அவர் பெற்றார். தற்போது 27 வயதே ஆன அவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர் கிருஷ்ணசாமி அல்லாடி தலைமையிலான நிபுணர் குழு, ராமானுஜன் விருதுக்கு அக்ஷய் வெங்கடேஷ் பெயரைத் தேர்வு செய்தது.
