இணைய தளம் மூலம் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை. விரிவுரைகள்!
இணைய தளம் மூலம் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை. விரிவுரைகள்!
UPDATED : அக் 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பிரிட்டனில் உள்ள பழம்பெரும் பல்கலைக்கழகங்களான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கும் இடையே எப்போதும் போட்டி இருக்கும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த 25 மாணவர்கள் பிரிட்டீஷ் பிரதமர் ஆகியிருக்கிறார்கள் என்று அந்த பல்கலைக்கழகம் மார்தட்டும்.
நோபல் பரிசு பெற்றவர்களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் படித்தவர்கள் அதிகம் என்பது அப்பல்கலைக்கழகத்தின் எதிர்வாதம். டார்வினும் நியூட்டனும் எங்களது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களே!
இந்தப் பல்கலைக்கழகத்தில் முக்கியப் பிரமுகர்கள் ஆற்றிய விரிவுரைகள், அட்மிஷன் விதிமுறைகள் போன்றவற்றை மாணவர்களும் மற்றவர்களும் இலவசமாக கேட்பதற்கு ஏற்ற வகையில் 450 மணி நேர நிகழ்ச்சிகளை இணைய தளத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் பதிவு செய்துள்ளன.
இந்த விரிவுரைகளை கம்ப்யூட்டரிலோ அல்லது எம்.பி.,3 பிளேயரிலோ டவுன்லோடு செய்து கேட்கலாம். இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?, கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?, நேர்காணலுக்குத் தயாராவது எப்படி?...என்பது போல மாணவர்களுக்கு ஆலோசனை கூறும் பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று போட்டி போடும் ஆக்ஸ்போடு பல்கலைக்கழகமும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் ஒரே நேரத்தில் இந்தச் சேவையை வழங்க முன்வந்துள்ளன.
