தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எட். படிப்பில் சேர ஆர்வம்

பி.எட். படிப்பில் சேர ஆர்வம்

பி.எட். படிப்பில் சேர ஆர்வம்


UPDATED : அக் 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


இதில் சேருவதற்காக கிட்டத்தட்ட 6 லட்சம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தன. இதன் நுழைவுத் தேர்வு வரும் அக்டோபர் 19 அன்று நடைபெறவுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே தொழில் நுட்பத் தேர்வுகளுக்கு இணையான நுழைவுத் தேர்வாக இது உருவாகியுள்ளது.


முதலில் செப்டம்பர் 23 அன்று நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் இந்தத் தேதிகள் அக்டோபர் 5க்கும் அக்டோபர் 12க்கும் ஒத்திப் போடப்பட்டன. தற்போது இந்த படிப்பில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதன் காரணமாக இத் தேர்வுகள் மீண்டும் ஒத்திப் போடப்பட்டு அக்டோபர் 19ந் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.736 என்பதால் தேர்வுத் தேதிகள் ஒத்திப் போடப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு அதிக வருவாயை ஈட்டித் தந்துள்ளது. கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் பங்கு கொள்ளும் நுழைவுத் தேர்வு உ.பியின் 925 மையங்களில் நடைபெறவுள்ளது. இப்படிப்பட்ட தேர்வை நடத்துவது ஆக்ரா பல்கலைக்கழகத்திற்கு இதுவே முதல் அனுபவமாகும்.


தேர்வு நடைபெறும் நாளில் தேர்வு மையங்களைச் சுற்றி 300 மீட்டர் தூரத்திற்கு 144 தடையுத்தரவுச் சட்டம் அமலில் இருக்கும். தேர்வு மையங்களில் பொதுத் தொலைபேசி, பேக்ஸ் போன்றவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 11 பதிவாளர்களும் இத் தேர்வை நடத்த பல்கலைக்கழகம் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us