தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேரளத்தில் சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் தேர்ச்சி குறைகிறது!

கேரளத்தில் சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் தேர்ச்சி குறைகிறது!

கேரளத்தில் சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் தேர்ச்சி குறைகிறது!


UPDATED : அக் 17, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கேரள பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 19 கல்லூரிகளில் 11 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுல்ளனர். 20 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள கல்லூரிகளே நான்கு இருக்கின்றன. இவையெல்லாம் சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகள்.


இந்தக் சுயநிதிக் கல்லூரிகளில் வழக்கமான இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளைவிட கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இப்பாடப்பிரிவுகளை நடத்த போதிய தகுதி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.


அத்துடன் இந்த சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்துவிட்டது.
இக்கல்லூரிகளில் ஒரு சில பாடப்பிரிவுகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறாத நிலை உள்ளதும் தெரிய வந்துள்ளது.


இந்த ஆண்டைவிட 2006ம் ஆண்டில் இந்த சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் தற்போதைய நிலையைவிட நன்றாகவே இருந்தது.


2002ம் ஆண்டில் கடைப்பிடிக்கப்பட்ட அட்மிஷன் நடைமுறைப்படி 50 சதவீத இடங்களுக்கு ப்ரீ சீட் பிரிவின் கீழ் குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் இந்த சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது. 2004ம் ஆண்டிலிருந்து ப்ரீ சீட், பேமெண்ட் சீட் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து இடங்களுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. எனவே, மதிப்பெண் குறைந்திருந்தாலும் கூடுதல் கட்டணம் செலுத்துவதற்கு வசதி படைத்த மாணவர்களே சேரும் நிலை ஏற்பட்டது. இதனால், சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

பல்கலைக்கழகக் கல்லூரியில் கட்டணம் குறைவாக இருப்பதால் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அங்கு சேருகின்றனர். அதனால் அங்கு தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் சிறப்பிடம் பெற்ற 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்ஜினியரிங் கல்லூரிகளின் மூன்று ஆண்டு தேர்வு முடிவுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்து கேரள பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


விவரங்களுக்கு: http://kucc.keralauniversity.edu

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us