UPDATED : அக் 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
எனினும் இவற்றையெல்லாம் புறந்தள்ளி இந்தியாவின் ஐ.டி. மற்றும் ஐ.டி. தொடர்புடைய துறைகள் 2008ம் ஆண்டின் 4வது காலாண்டிலும் தொடர்ந்து அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருகின்றன.
மேன்பவர் எனப்படும் எச்.ஆர். கன்சல்டிங் நிறுவனம் ஒன்று சமீபத்தில் நடத்திய சர்வேயின்படி இத் துறைகளில் தொடர்ந்து பணிகளுக்கான ஆட்கள் எடுப்பது தொடரும் என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு இந்தியாவிலுள்ள ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., மற்றும் பி.பி.ஓ. துறைகளிலுள்ள 1098 நிறுவனங்களிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பங்கு பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த 57 சதவீதத்தினர் தொடர்ந்து வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் 26 சதவீதம் பேர் தற்போதைய வேலை வாய்ப்புகள் அதே அளவில் நீடிக்கும் என்றும் ஒரு சதவீதத்தினர் மட்டுமே பணி வாய்ப்புகள் குறையும் என்றும் கருத்து தெரிவித்தனர். 16 சதவீதத்தினர் எந்த விதமான கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவில் ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., பிரிவுகளுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோன்றுவதே அபரிமிதமான பணி வாய்ப்புகளுக்குக் காரணம் என்று மேன்பவர் நிறுவனம் கருதுகிறது. புதிய மாதிரிகள் உருவாகுதல், புதுப்புது தொழில்கள், உலகார்ந்த சேவை முறைகள், வளரும் பி.பி.ஓ. மற்றும் கே.பி.ஓ. துறை போன்ற பணி வாய்ப்பு விகிதங்களை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் மேன்பவர் நிறுவனம் கூறியுள்ளது.
